வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில்  வேட்பாளர்கள் முன்னிலையில் சீல்
X

ஸ்டார்ங் ரூமிற்கு சீல் வைப்பு.

ஸ்டிராங் ரூமிற்கு கொண்டு வரப்பட்டு, சட்டமன்ற வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் 582 மையங்களில் 2059 வாக்குச்சாவடிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது முதல், மாலை 6 மணி வரை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். குறிப்பாக நகர்ப்புறங்களை விட கிராமப்புற வாக்காளர்கள் வாக்களிப்பதில் அதிக ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக கிராமப்புறங்களில் வாக்குப்பதிவு அதிகரித்து காணப்பட்டது.

கோவை மக்களவை தொகுதியில் மொத்தம் 64.42 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமிற்கு கொண்டு வரப்பட்டு, சட்டமன்ற வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி முன்னிலையில் இயந்திரங்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பாக அறைகளில் வைக்ககப்பட்டு சீல் வைக்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் தமிழக காவல்துறையினரும் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டிராங் ரூம் மற்றும் கல்லூரி வளாகம் என அனைத்தும் 300 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி கண்காணிக்கப்பட்டு வருகின்றது. திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் ஆகியோர் சீல் வைக்கும் பணிகளின் போது நேரில் இருந்தனர். பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்குபதிவு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணியினை பார்வையிட வரவில்லை.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வளாகத்தை சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியின் முகவர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் பகுதிகளில் இருப்பதற்கும், அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், அதுவரை இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!