அரசு விடுமுறை நாளிலும் இயங்கிய பள்ளி ; விடுமுறை அளித்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி

அரசு விடுமுறை நாளிலும் இயங்கிய பள்ளி ; விடுமுறை அளித்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி
X

வீட்டிற்கு சென்ற மாணவர்கள்

மாவட்ட கல்வி அலுவலர் கவனத்திற்கு சென்ற நிலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புளியகுளம் பகுதியில் இயங்கி வரும் வித்யா நிகேதன் என்ற தனியார் சிபிஎஸ்சி பாடத்திட்ட பள்ளி இயங்கி வருகிறது. அங்கு பயிலும் மழலையர் பள்ளிக் குழந்தைகளுக்கு கலை நிகழ்ச்சிகள் வைக்கப்பட்ட நிலையில், அக்குழந்தைகள் வண்ண உடையில் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வருகை புரிந்திருந்தனர். ஆனால் இதர வகுப்பினர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றதாக தெரிகிறது. அதனால் அந்த வகுப்பு மாணவர்கள் பள்ளி சீருடை பள்ளிக்கு இன்று வருகை புரிந்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் கவனத்திற்கு சென்ற நிலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மதியத்திற்கு பிறகு விடுமுறை அளித்தது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகளுக்காக பள்ளி வைக்கப்பட்டதாகவும், மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் மதியத்துடன் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதையடுத்து வந்த மாணவர்களின் பெற்றோர்கள் வந்து அவர்களது குழந்தைகளை அழைத்துச் சென்றனர். மதியமே பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வீடு திரும்பினர்.

Tags

Next Story
ai in future education