ரோடு ஷோவில் குழந்தைகளை பயன்படுத்திய விவகாரம் ; பாஜக நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்

ரோடு ஷோவில் குழந்தைகளை பயன்படுத்திய விவகாரம் ; பாஜக நிர்வாகிகளுக்கு நோட்டீஸ்
X

Coimbatore News- பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் (கோப்பு படம்)

Coimbatore News- மாணவர்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்க கோரி பாஜக நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

Coimbatore News, Coimbatore News Today- கோவையில் கடந்த் 18 ஆம் தேதி பாஜக சார்பில் நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி பள்ளி குழந்தைகளை பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.

கோவை சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா வித்யாலயம் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி மாணவர்களை சீருடையுடன் பிரதமர் பிரச்சார நிகழ்விற்கு அழைத்து சென்றது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மாவட்ட குழந்தை நல அலுவலர் அளித்த புகார் அடிப்படையில் சாய்பாபா காலனி போலீசார் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை வடவள்ளியில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளி நிர்வாகமும் மாணவர்களை பேருந்து மூலம் அழைத்து வந்து இருப்பதும் தெரிய வந்தது. கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கடவுள் வேடம் அணிந்து மாணவர்களை அழைத்து வந்து இருப்பதும், பாஜக துண்டுகளையும் மாணவர்களுக்கு அணிவித்து பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள், பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சின்மயா வித்யாலயா பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனிடையே கோவை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து பள்ளி மாணவர்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது குறித்து விளக்கம் அளிக்க கோரி கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!