மாற்றுச்சான்றிதழ் தர மறுப்பதாக தனியார் கல்லூரி மீது மாணவர் புகார்

மாற்றுச்சான்றிதழ் தர மறுப்பதாக தனியார் கல்லூரி மீது மாணவர் புகார்
X

Coimbatore News- புகார் அளிக்க வந்த மாணவர்

Coimbatore News- மாற்றுச்சான்றிதழ் தர மறுப்பதாக தனியார் கல்லூரி மீது மாணவர் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Coimbatore News, Coimbatore News Today- கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் சசீதரன். இவரது மகன் வைஷ்ணவ், கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.

அதே கல்லூரியில் பயிலும் சக மாணவர்களான யாசின், ஹபின், ரிசில், லிதின் ஆகியோர் வைஷ்ணவ் மீது தாக்குதல் நடத்தியதாக கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான வைஷ்ணவ் தொடர்ந்து கல்லூரியில் பயில விருப்பம் இல்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து கல்லூரி நிர்வாகத்திடம் மாற்று சான்றுதழ் வழங்குமாறு கேட்டதாகவும் மீதம் உள்ள மூன்று ஆண்டுகளுக்கான 1,27,000 ரூபாய் பணத்தை செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் வழங்க முடியும் என கல்லூரி நிர்வாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஒரு மாதம் கடந்த நிலையில் நேற்று மாற்று சான்றிதழ் பெற சென்ற போது கல்லூரியின் முதல்வர் மற்றும் டீன் தனியாக அழைத்து சென்று வரும் கல்வி ஆண்டுகளுக்கான பணத்தை செலுத்தினால் மட்டுமே மாற்று சான்றிதழ் வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போர்டு மீட்டிங் நடத்திய பின்னரே முடிவு செய்ய முடியும் எனவும், தாக்குதல் நடத்திய மாணவர்களின் பெற்றோருடன் விசாரணைக்கு பின் சான்றிதழ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளனர்.

தொடர்ந்து மன உளைச்சல் ஏற்படுத்துவதுடன் அதிகார தோரணையுடன் நடந்து கொள்ளும் கல்லூரி நிர்வாகம், டீன் மற்றும் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்து பாதிக்கப்பட்ட மாணவன் வைஷ்ணவ் தன் தந்தையுடன் வந்திருந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மாற்று சான்றுதழ் வழங்குமாறு கேட்டதாகவும் மீதம் உள்ள மூன்று ஆண்டுகளுக்கான 1,27,000 ரூபாய் பணத்தை செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் வழங்க முடியும் எனவும் கல்லூரி நிர்வாகம் கூறியதாக புகார் அளித்துள்ளார்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself