கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

கோடநாடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை
X

காவலர் பயிற்சி பள்ளி.

தீபு, சதீசன், ஜம்சீர் அலி, பிஜின் குட்டி, ஜித்தின் ஜாய் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.

கடந்த 2017ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இதனிடையே கோடநாடு வழக்கில் நீலகிரி காவல் துறையினர் 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 150 க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தியுள்ளனர்.

இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதேபோல கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடநாடு வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தீபுவிடம் கோடநாடு வழக்கு தொடர்பாக ஒரு கட்சியினர் பேரம் பேசியதாக கூறியிருந்தார். இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை காவலர் பயிற்சி பள்ளியில் நீலகிரி மாவட்ட தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளியில் தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கோடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ள தீபு, சதீசன், ஜம்சீர் அலி, பிஜின் குட்டி, ஜித்தின் ஜாய் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. கோடநாடு வழக்கு தொடர்பாகவும், பேரம் பேசப்பட்டது தொடர்பாகவும் தனிப்படை காவல் துறையினர் 5 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!