நான்கு சதவீத வாக்குகள் மட்டுமே வைத்திருக்கும் பாஜக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் : எஸ்பி வேலுமணி

நான்கு சதவீத வாக்குகள் மட்டுமே வைத்திருக்கும் பாஜக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் : எஸ்பி வேலுமணி
X

ஆதரவு திரட்டிய வேலுமணி

பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசும் கோவைக்காக எதுவும் செய்யவில்லை

கோவை பந்தைய சாலை பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மற்றும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது உறுதி. அதிமுக தான் கோவையில் மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்தது என்பது மக்களுக்கு தெரியும்.

கோவை பந்தய சாலையில் உள்ள நடை பயிற்சிக்கான நடைபாதை உட்பட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைகளை அமைத்து தந்து 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை கோவைக்கு அதிமுக கொடுத்தது. திமுக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசும் கோவைக்காக எதுவும் செய்யவில்லை. தற்போது பாஜக வேட்பாளர் அண்ணாமலை 500 நாட்களில் 100 திட்டங்களை தருவதாக வாக்குறுதி தந்துள்ளதாகவும் விபரம் தெரிந்த மக்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கோவையில் சர்வதேச விமான நிலையம் அமைப்போம் என்கிறார்கள், ஆனால் எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோது முதன்மை செயலாளரை நேரடியாக அழைத்து வந்து விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிதி ஒதுக்கி ,நில எடுப்பு செய்து கொடுத்தோம். ஆனால் அப்போது மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்பது இங்கு உள்ள மக்களுக்கு நன்றாக தெரியும். திமுகவிற்கும் அண்ணா திமுகவிற்கும் தான் போட்டி என்றுள்ள சூழலில், திமுக இப்போது களத்தில் இல்லை. அதேவேளையில் பாரதிய ஜனதா கட்சி மீடியா மூலமும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெரும் என்று பரப்பி வருகின்றனர்.

அண்ணாமலைக்கு செல்வாக்கு இருப்பதாகவும் பரப்புகிறார்கள். மொத்தமாகவே மூன்று முதல் நான்கு சதவீதம் வாக்குகளை மட்டுமே வைத்திருக்கும் பாஜக மூன்றாவது இடத்திற்கு தான் தள்ளப்படும். பாஜகவிற்கு நான்கு எம்எல்ஏக்களை வெற்றி பெறச் செய்தது அதிமுக தான். பாரதிய ஜனதா கட்சி முதலில் ஒவ்வொரு பூத்திருக்கும் ஆள் போடட்டும் என்றும் களத்தில் அதிமுக மட்டுமே உள்ளது எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil