"மாரிதாஸ் வாழ்க" என எழுதி வந்தவரால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

மாரிதாஸ் வாழ்க என எழுதி வந்தவரால்  ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
X

கந்தசாமி.

நெற்றியில் "மாரிதாஸ் வாழ்க" என்றும் கைகளில் "ஃபாரின் மதநெறி திமுக சிற்றரசு ஒழிக" என்றும் எழுதியபடி வந்தார்.

பாஜக ஆதரவாளரான மதுரையை சேர்ந்த மாரிதாஸ் என்ற யூடியூபர் முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சையை கிளப்பும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டதாகவும் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது தொடர்பாக திமுகவினர் அளித்த புகாரின் பேரில் மதுரை காவல் துறையினர் மாரிதாஸை கைது செய்தனர். இந்த கைது சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் பொதுமக்களுக்கும் மாரிதாஸ் கைதிற்குக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரூர் பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர், அவரது நெற்றியில் "மாரிதாஸ் வாழ்க" என்றும் கைகளில் "ஃபாரின் மதநெறி DMK சிற்றரசு ஒழிக" என்றும் எழுதியபடி வந்தார். நான் எந்த கட்சியை சேர்ந்தவர் இல்லை என்றும் இந்து என்ற உணர்விலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக கந்தசாமியை காவல்துறையினர் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!