குடியரசுத்தலைவர் கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குடியரசுத்தலைவர்  கோவை  வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
X

குடியரசுத்தலைவர் கோவை வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் 

ஈஷா யோகா மையத்திற்கு குடியரசுத்தலைவர் முர்மு வருவதையொட்டி கோவை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகிற 18-ந் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மகா சிவராத்திரி விழா நடக்க இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார்.

குடியரசுத்தலைவர் கோவை வருகையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் காணொலி மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இவர்களுடன், துறை ரீதியாக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக, தலைமை செயலர் இறையன்பு ஆலோனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில்,

  • குடியரசுத்தலைவருக்குரிய அனைத்து வித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாநகர காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.
  • வெடிகுண்டு செயலிழப்பு கருவிகள் தயாராக வைத்திருக்க வேண்டும்.
  • விழா நடக்கும் இடத்தில், ஆளுநர்கள், முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு விதிமுறைக்கு உட்பட்டு இருக்கை வசதி செய்து கொடுக்கும் பொறுப்பு, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் மேற்கொள்ள வேண்டும் .
  • சிறப்பு மருத்துவ நிபுணர்களுடன் மருத்துவ குழு இருக்க வேண்டும்.
  • மின் வினியோகத்தில் எவ்வித இடையூறும் இருக்கக் கூடாது.ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • சாலைகளை சீரமைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையடுத்து குடியரசுத்தலைவர் வருகையையொட்டி, கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில், 5,000 காவல்துறையினரும், மாநகரில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் என 6000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அண்டை மாவட்டங்களில் இருந்து காவல்துறையினரை வரவழைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்குவோர் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!