கோவை மாநகராட்சியை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சியை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்
X

தூய்மை பணியாளர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சியில் தினக்கூலி தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், துலக்குனர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் என பலர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி பணியாளர்களின் அதிகார குரல் கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாடாபாத் பகுதியில் இன்று 100 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி 2 மணி நேரம் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோவை மாநகாராட்சியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மாநகராட்சி ஒப்பந்தப்படி ஊதியம் வழங்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களின் எட்டு மாத இஎஸ்ஐ மற்றும் பிஎப் பணத்தை செலுத்தாத சதர்ன் சாலிட் வேஸ்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், பணிச்சுமையால் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணமாக 20 லட்ச ரூபாய் வழங்க வேண்டும், பணி பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது கோரிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமெனவும், இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story