கோவை தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்துவதாக கூறி கொள்ளை

கோவை தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்துவதாக கூறி  கொள்ளை
கோவை தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்துவதாக கூறி கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோவை தனியார் நிறுவனத்தில் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோவை குனியமுத்தூர்-பாலக்காடு மெயின் ரோடு ஞானபுரம் ஜங்சனில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று முன்தினம் இரவு 7 பேர் கொண்ட கும்பல் சென்றனர். அவர்கள் அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் தங்களை ஜமாத்தில் இருந்து வருவதாக அறிமுகம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தாங்கள் ஒவ்வொரு கடையாக சோதனை செய்து வருவதாகவும், இங்கும் சோதனை செய்ய வேண்டும் என கூறி அத்துமீறி உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் சோதனை செய்வது போல நடித்து ஊழியரை மிரட்டி அங்கிருந்த மொபைல் டேப், சிசிடிவி காமிரா மற்றும் ஒரு சிம்கார்டை கொள்ளையடித்து சென்றனர்.

கோவையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகி வருவதால் வியாபாரிகள் ஒருவித அச்சத்தில் உள்ளனர். உண்மையிலேயே அதிகாரிகள் வந்தாலும் அவர்கள் மீது நம்பிக்கை கொள்ள முடியாத அளவில் போலி அதிகாரிகளின் செயல்பாடுகள் இருப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் அடையாளங்களை சம்பந்தப்பட்ட நிறுவத்தின் உரிமையாளர் எடுத்துக்கூறி புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story