கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி; ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவியர்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி; ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவியர்
X

Coimbatore News- மாணவ மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

Coimbatore News- கோவையில் மாணவ, மாணவியர் பதாகைகளை ஏந்தியபடி முக்கிய சாலைகள் வழியாக பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Coimbatore News, Coimbatore News Today- கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது. இந்த நிறுவனங்கள் சார்பில் நாட்டு நலப்பணித் திட்டம் உடன் கோயம்புத்தூர் விழாக்குழு இணைந்து இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இச்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியில் மாணவ, மாணவிகள், சாலை விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தல், தலைக்கவசம் அணிதல், சீட்பெல்ட் அணிதல், மித வேகத்தில் பயணித்தல், ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழிவிடுதல் மற்றும் போதை இல்லா கோவையை உருவாக்கிட விழிப்புணர்வு பதாகைகளோடு பேரணியில் பங்கேற்றனர்.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லஷ்மிநாராயணசுவாமி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணிக்குத் தலைமையேற்று அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னலில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் கல்லூரி முதல்வர்கள் - நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஏ.டி.எஸ்.பி. சிற்றரசன், காவல் துறை அதிகாரிகள், போக்குவரத்துக் காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். அப்போது 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பதாகைகளை ஏந்தியபடி முக்கிய சாலைகள் வழியாக பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!