ரயில் கட்டணம் குறைப்பு பாஜகவின் தேர்தல் நாடகம் : எம்.பி நடராஜன் சாடல்

பி.ஆர். நடராஜன்
சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனை குழு கூட்டம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சிங்கா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த நாடாளுமன்ற மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் பயணிகளின் தேவையை அறிந்து சேவை செய்ய வேண்டும். குறிப்பாக கோவை மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. வடமாநிலத்தில் இருந்து வரும் ஆறு விரைவு ரயில்களை கோவையை புறக்கணித்து பீளமேடு, போத்தனூர் வழியாக இயங்குகிறது. இத்திட்டத்தை கைவிட வேண்டும்.
பொள்ளாச்சி - திண்டுக்கல் அகல ரயில் பாதையில் கோவையில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதிகளுக்கு இரவு நேர ரயில்களை இயக்கிட வேண்டும். கோவையிலிருந்து பெங்களூருக்கு இரவு நேர ரயில்களை இயக்கிய வேண்டும். நகரத்தின் நெரிசலை குறைக்கவும், பயணிகளின் தேவையை அறிந்தும், சிங்காநல்லூர், பீளமேடு ரயில் நிலையங்களில் கோவை வந்து செல்லும் ரயில்களை நிறுத்திட வேண்டும்.
கோவை மேட்டுப்பாளையம் வழித்தடத்தை இருவழிப்பாதையாக மாற்றிட வேண்டும். இப்படி பயணிகள் தேவை அறிந்து நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். ஆனால், இக்கோரிக்கைகள் அப்படியே நிலுவையிலேயே இருக்கிறது. இப்போது தொலைதூர ரயிலுக்கு கட்டணத்தை குறைக்காமல், பாசஞ்சர் ரயிலுக்கும் மட்டும் கட்டண குறைப்பு என்பது பாஜகவின் தேர்தல் நாடகம் என்பது அப்பட்டமாக தெரிகிறது.
அதேபோன்று, பயணிகள் வரத்து குறைவு என்பதால் ரயில்களை ரத்து செய்யும் நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தினால் கோவையில் இருந்து பெங்களூர் செல்லும் வந்தே பாரத் ரயில் குறைந்த பயண எண்ணிக்கையிலேயே செல்கிறது. அதனை உங்களால் நிறுத்தி விட முடியுமா என காரசாரமாக கேள்வி எழுப்பினார்.
இதேபோன்று, நாமக்கல் ஏ.கே.பி.சின்ராஜ் எம்பி., தர்மபுரி டாக்டர் எஸ்.செந்தில்குமார் எம்பி., கிருஷ்ணகிரி டாக்டர் எ.செல்லகுமார் எம்.பி., மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் ரயில்வே பயணிகள் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu