கோவை மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

கோவை மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
X

தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்

கவுன்சிலர்கள் வாக்களிப்பதற்கு தேவையான பந்தல்களும் அமைக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன

கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக கவுன்சிலர் ரங்கநாயகியை திமுக தலைமை அறிவித்துள்ளது. கோவை மாநகராட்சி தேர்தல் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

100 வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சியில் 96 வார்டுகளில் திமுக கூட்டணி கட்சியினர் கவுன்சிலர்களாக இருக்கின்றனர். ஒரு வார்டில் எஸ்டிபிஐ கட்சி கவுன்சிலரும், மூன்று வார்டுகளில் அதிமுக கவுன்சிலர்களும் இருக்கின்றனர். திமுக கூட்டணி பலம் வாய்ந்த அணியாக இருக்கும் நிலையில், திமுக வேட்பாளராக 29 வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை காலை அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிட வாய்ப்பு குறைவு என்பதால், ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்படவே அதிகப்படியான வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் நாளை வேறு யாராவது வேட்பு மனு தாக்கல் செய்தால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாநகராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் தேர்தலுக்கான வாக்குப்பெட்டி, வாக்கு பதிவு செய்யும் இடம், வாக்கு எண்ணிக்கைக்கான டிரே உள்ளிட்ட பொருட்கள் தயார் நிலையில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் கவுன்சிலர்கள் வாக்களிப்பதற்கு தேவையான பந்தல்களும் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வாக்குகளை எண்ணுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. அதேபோல பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே தேர்தலுக்கான ஏற்பாடுகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.

Tags

Next Story
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கிறிஸ்துமஸ் தின விழா