பெரியநாயக்கன்பாளையம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பெரியநாயக்கன்பாளையம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
X

பெரியநாயக்கன்பாளையம் மகா மாரியம்மன் கோவில் 

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறுகிறது

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை ஒட்டி இன்று காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

தொடர்ந்து 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, விநாயகர் வேள்வி, கோமாதா வழிபாடு, அடியார்கள் காப்பணிதல், மதியம் 2 மணிக்கு முளைப்பாளியை ஊர்வலம், தீர்த்த குடங்கள், விமான கலசங்கள் ஊர்வலம் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, நிலத்தவர் வழிபாடு, புற்று மண் எடுத்து வருதல், திருக்குடங்கள் கேள்வி சாலைக்கு புறப்பாடு, இரவு 7.30 மணிக்கு முதலாம் கால வேள்வி பூஜைகள், 108 வகையான காய்கனி கிழங்கு உள்ளிட்ட மூலிகை பொருட்கள், மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல் நடைபெறுகிறது.

நாளை காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 10 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, ராகம், தாளம் வாசித்தல், பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜைகள், நடைபெறுகிறது.

வருகிற 23-ம் தேதி காலை 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு விமான கலசம் நிறுவுதல், 10 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜைகள், மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல் மாலை 6 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி பூஜைகள், இரவு 7 மணிக்கு அம்மனுக்கு என் வகை மருந்து சாற்றுதல் நடைபெறுகிறது.

24-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால வேள்வி பூஜைகள், 6 15 மணிக்கு திருக்குடங்கள் கோவிலை வந்து அடைதல், 6.45 மணிக்கு விமான கலசங்களுக்கும், 7.15 மணிக்கு மூர்த்திகளுக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

9 மணிக்கு அலங்கார பூஜைகள், 10 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் இன்றில் இருந்தே கும்பாபிஷேக நாள் வரை அன்னதான நிகழ்ச்சிகளும் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள், இந்துசமய அறநிலைத்துறை, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம், ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்