கோவை மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வு : உற்சாகத்துடன் மாணவர்கள் வருகை

கோவை மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வு : உற்சாகத்துடன் மாணவர்கள் வருகை
X

கோவையில் தேர்வு மையம் ஒன்றில் பிளஸ் டு தேர்வெழுதும் மாணவர்கள். 

கோவை மாவட்டத்தில் இன்று 12ம் வகுப்பு தேர்வு துவ‌ங்கி, ந‌டைபெற்று வ‌ருகிற‌து .

தமிழகம் முழுவதும் இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் 119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில், பொதுத்தேர்வை 35033 மாணவர்கள் எழுதுகின்றனர். இது தவிர 2047 தனி தேர்வர்களும் தேர்வை எழுதுகின்றனர்.

தேர்வு மையங்க‌ளுக்கு மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் வருகை தந்தனர். அவர்களை ஆசிரியர்கள் வாழ்த்தினர். தேர்வு அறையில் குடிநீர், தடையற்ற மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தேர்வுக்கான வினாத்தாள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகள் வாட்ச், பெல்ட் அணிந்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு அறைக்கு வெளியே செருப்பு, ஷூ உள்ளிட்டவற்றை கழற்றி விட்டு உள்ளே செல்ல வேண்டும். மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!