கோவை மாவட்டத்தில உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கை

கோவை மாவட்டத்தில உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கை
X

கோவையில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் இன்று பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது.

கோவை மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் இன்று பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்றது.

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் மே 23ம் தேதி முதல் பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் தமிழகஅரசின் கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்து. இதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று காலை 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கியது. கோவையில் உள்ள அனைத்து அரசு பள்ளி களிலும் இன்று காலை முதலே மாணவ, மாணவிகள் ஏராளமானோர் தங்களது பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்திருந்தனர். அவர்கள் பள்ளியில் தாங்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவினை தேர்வு செய்து கொண்டனர்.

10-ம் வகுப்பு வரை ஒரே மாதிரியான பாடப்பிரிவில் பயின்று வந்த மாணவர்கள் தற்போது பிளஸ் 1 வகுப்பில் பல்வேறு பாடப்பிரிவுகள் இருப்பதால் சில மாணவர்கள் எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது என தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர். அப்படி குழப்பமாக இருந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் எந்த பிரிவை எடுத்து படிக்கலாம் என்பது குறித்து அறிவுரை வழங்கினர். பெற்றோர்களுக்கும் ஒவ்வொரு பாட பிரிவின் சிறப்புகள் குறித்து விளக்கி கூறினார்கள். இதனை தொடர்ந்து மாணவர்கள் தெளிவு பெற்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுமே மாணவர் சேர்க்கையானது விறு,விறுப்பாக நடைபெற்றது.

Tags

Next Story