கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சி.எம்.சி காலனி மக்கள்

கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சி.எம்.சி காலனி மக்கள்

கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சிஎம்சி காலனி பகுதி மக்கள்.

வீடு கட்டித்தரக்கோரி கோவை மாநகராட்சி அலுவலகத்தை சி.எம்.சி காலனி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

கோவையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த மேம்பால கட்டுமான பணிகளுக்காக கடந்த 2018 ம் ஆண்டில், சிஎம்சி காலனி பகுதியில் உள்ள இடம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சி.எம்.சி காலனி குடியிருப்பு வாசிகள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது கடந்த 2018 ஆம் ஆண்டு உக்கடத்தில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்காக இடம் தேவைப்படுவதால், சி.எம்.சி காலனி மக்களிடம் மீன் மார்க்கெட் அப்புறப்படுத்தப்பட்டு, பாலத்துக்கு தேவையான இடங்களை எடுத்துக் கொண்டு, மீதமுள்ள இடங்களில் 520 வீடுகள் கட்டப்படும் எனவும், இந்தத் திட்டம் 18 மாதங்களில் முடிக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

ஆனால் வாக்குறுதி அளித்தபடி இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், தாங்கள் சுமார் 200 ஆண்டுகளாக உக்கடம் சிஎம்சி காலனி பகுதியில் வசித்து வருவதாகவும் கூறிய அவர்கள், தினந்தோறும் தூய்மை பணியை மேற்கொள்பவட்கள் என்பதால் தங்களுக்கு அதே பகுதியில் வீடு கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மாநகராட்சி நிர்வாகம் தங்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மீன் மார்க்கெட் விரைவில் அப்புறப்படுத்தப்பட வேண்டும், அந்த இடம் குடிசை மாற்று வாரியத்துக்கு ஒப்படைக்கப்பட வேண்டும், 520 புதிய வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் கோரிக்கை மனுவை மாநகராட்சி ஆணையாளரிடம் சமர்ப்பித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story