கோவைக்கு விமானத்தில் வந்த பெண் பயணிக்கு கொரோனா உறுதி

கோவைக்கு விமானத்தில் வந்த பெண் பயணிக்கு கொரோனா உறுதி
X
ஷார்ஜாவிலிருந்து கோவை வந்த பெண் பயணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த பயணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

சீனா உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க அதி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சீனாவில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய அனைத்து விமானநிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கோவை சர்வதேச விமானநிலையத்திலும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமானநிலையத்தில் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு 167 பயணிகளுடன் வந்த விமானத்தில் சேலத்தை சேர்ந்த ஒரு பயணிக்கு கொரோனா உறுதியானது.

இந்நிலையில் சார்ஜாவில் இருந்து கடந்த 7-ந் தேதி கோவை வந்த விமான பயணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ரேண்டம் முறையில் எடுக்கப்பட்ட சளி மாதிரியில் பீளமேட்டை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த பெண் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவரது மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் எந்த வகை கொரோனா என்பது தெரிய வரும்

Tags

Next Story
ai in future agriculture