எதிர்கட்சிகள் என்பது எதிரி காட்சிகள் கிடையாது - வானதி சீனிவாசன்

எதிர்கட்சிகள் என்பது எதிரி காட்சிகள்  கிடையாது - வானதி சீனிவாசன்
X

வானதி சீனிவாசன்

எதிர்கட்சிகள் என்பது எதிரி காட்சிகள் கிடையாது. ஒருவரை பார்த்துக் கொள்ளும் போது நலம் விசாரித்து வரவேற்க கூடியது.

கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் மனையியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

அப்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க செல்போன் பயன்பாட்டின் மூலம் வெளியேறும் மாசுபாடுகளை கட்டுப்படுத்தும் வகையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனது செல்போன்களை அணைத்து வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய வானதி சீனிவாசன், ”சுற்றுச்சூழல் மாசுபாடை குறைக்கும் வகையில் சூரிய சக்தி மின் உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உலக நாடுகளோடு ஒப்பந்தம் செய்து பிரதமர் மோதி தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மாசில்லா சுற்றுச்சூழலை உருவாக்க அதிக அளவு மரங்களை நட வேண்டும். அதற்கான நிதியாக தனது சட்டமன்ற தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த வானதி சீனிவாசன், “1 கோடி வீடுகளுக்கு சூரிய ஒளி மின் திட்டம் கொடுக்கணும் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். பிளாஸ்டிக் ஒழிப்பு மக்கள் பங்களிப்பு இருந்தால் தீர்வு காண முடியும். வெள்ளலூர் தீயணைப்பு டீ செலவு என்பது 27 இலட்சம் என கணக்கு பொத்தம் பொதுவாக இருக்கக்கூடாது. ஹை குவாலிட்டி டீ எங்கு வாங்கினால் எனப் பதில் அளித்தால் நன்றாக இருக்கும். மாநகராட்சி நிர்வாகத்தில் பிரச்சனை உள்ளது. ஒரே நாளில் 333 தீர்மானங்கள் நிறைவேற்ற அவசியம் என்ன? மக்களிடம் மறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம். மாநகராட்சி செயல்பாடுகளை மக்கள் மத்தியில் எடுத்து செல்ல வேண்டும். திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்பது மக்கள் தெரியும். திமுகவின் அரசியல் செயல்பாடுகளில் மாற்றம் இல்லை.

கொலை குற்றங்களை தடுக்க மாநில அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அதிகாரிகளை மாற்றுவது நடவடிக்கை இல்லை. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது என்கவுண்டர் தீர்வு கிடையாது. பட்ஜெட்டில் சிறு குறு தொழில் நிறுவனங்களில் அதிகம் பலன் அடையும் மாநிலம் தமிழ்நாடு. உள் கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள் அதிகம் வர உள்ளது. திமுக அனைத்து துறைகளிலும் வரியை உயர்த்தி உள்ளது. முதல்வர் மாதம் ஒருமுறை பிரதமரை திட்டம் தொடங்கி வைக்க அழைப்பீர்களா? தேர்தல் நேரத்தில் முதல்வர் அனைத்து மாவட்டத்திற்கும் போனார். இப்போது காணொளி காட்சி வாயிலாக ஆரம்பித்து வைக்கிறார்கள். சீமான் அண்ணாமலை சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்கட்சிகள் என்பது எதிரி காட்சிகள் கிடையாது. ஒருவரை பார்த்துக் கொள்ளும் போது நலம் விசாரித்து வரவேற்க கூடியது. பாஜக மாநில தலைவர் எதை செய்தாலும் ஏன் பூதக் கண்ணாடி வைத்து பார்க்கிறீர்கள். நடிகர் விஜய் மாநாடு நடத்தி முதலில் வரட்டும், பின்னர் பார்ப்போம். அரசியல் என்றால் மாநாடு என்பது முக்கியம் தான்” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!