பாஜக செய்த மாதிரி காட்டிக் கொண்டிருக்கிறது : கணபதி ராஜ்குமார் சாடல்..!

பாஜக செய்த மாதிரி காட்டிக் கொண்டிருக்கிறது : கணபதி ராஜ்குமார் சாடல்..!
X

கணபதி ராஜ்குமார் வாக்கு சேகரிப்பு

பன்முகத்தன்மை கொண்ட பழைய கோவையை மீட்டெடுக்க உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்

கோவை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கணபதி உடையாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தல் என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல், உங்களுக்கு அதற்கான காரணங்கள் புரியும்.

எதிரே நிற்கக்கூடிய சக்திகள் நம்மை நாட்டை இனரீதியாக மதரீதியாக பிரித்து நமக்குள் பிரச்சனை ஏற்படுத்தி பத்தாண்டுகளாக ஆட்சி புரிந்து நமக்கெல்லாம் எதுவும் செய்யாமல், பணம் வீக்கத்தை ஏற்படுத்தி ஜிஎஸ்டி என்னும் சட்டத்தை என்னும் வரியை கொண்டு வந்து நம்மையெல்லாம் பாதிப்படையை செய்தது இன்றைக்கு பழைய கோவை எப்படி இருந்ததோ, அதற்கு நேர் எதிராக இன்றைக்கு தள்ளாடும் ஒரு கோவையாக மாற்றி மக்களுடைய வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கிறார்கள் எதிர்க்கட்சிகள்.

இவற்றை நாம் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். மீண்டும் 2014க்கு முன்பு எப்படி கோவை இருந்ததோ பன்முகம் கொண்ட கோவை தொழில்முகம் சிறு குறு தொழிற்சாலைகள் பெரும் தொழிற்சாலைகள் என்று பணப்புழக்கத்துடன் செல்வ செழிப்புடன் இருந்த கோவை நீங்கள் சற்று ஞாபகப்படுத்தி பாருங்கள்.

அத்தகைய கோவையை மீட்டெடுக்க நீங்கள் அனைவரும் வரக்கூடிய 19ஆம் தேதி நீங்கள் அனைவரும் எங்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும். நான் இந்த பகுதியைச் சேர்ந்தவன் தான், இங்கேதான் இருக்கப் போகிறேன். முதலமைச்சர் அவர்கள் சொன்னது நீங்கள் மக்களுக்குள்ளே மக்களாக இருக்க வேண்டும். என்னென்ன தேவை என்ன குறைகளோ அதையெல்லாம் கேட்டு தெரிந்து நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்று என்னை அனுப்பி வைத்திருக்கிறார்.

அதனால் தான் எங்களுக்கு எல்லாம் வாய்ப்பு கிடைத்து உள்ளது. வெளியூரிலிருந்து வருவார்கள் போவார்கள் போயே போய் விடுவார்கள். அவர்கள் சொல்லும் அந்த பொய் பிரச்சாரம் பொய் செய்திகளை யாரும் இளைஞர்களும் நம்பக்கூடாது. ஒன்றும் செய்யாமலே செய்த மாதிரி காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

இவ்வாறு இருக்க கொடுப்பவர்களுக்கும் அதை தடுப்பவர்களுக்கும் நடக்கும் யுத்தம் இது. மகளிருக்கு உரிமை தொகை விடியல் பயணம் என்ற பல திட்டங்களை கொடுக்கிறோம். முதலமைச்சர் சிறப்பாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதை இலவசம் என்று தடுக்கும் இந்த தீய சக்திகளை முறியடித்து, நமது குரல் நமது பகுதியில் கோவை நாடாளுமன்ற தொகுதியின் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க நீங்கள் அனைவரும் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!