கோவை நகரில் மிதமான மழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கோவை நகரில் மிதமான மழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
X

Coimbatore News- கோவையில் காலையில் மழை

Coimbatore News- கோவையில், காலை 8 மணிக்கு மேலாக நகரில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகின்றது.

Coimbatore News, Coimbatore News Today- தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வந்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக மழை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கோவை உட்பட தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று காலை மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதலே கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டம் நிலவி வந்தது.

இதனிடையே காலை 8 மணிக்கு மேலாக நகரில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகின்றது. குறிப்பாக ராமநாதபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, காந்திபுரம், கவுண்டம்பாளையம், ரேஸ் கோர்ஸ், வெள்ளலூர் உட்பட நகரில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இதேபோல தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, மதுக்கரை போன்ற புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. இதன் காரணமாக கோவையில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழை காரணமாக காலையில் பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். காலை நேரத்தில் பெய்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!