/* */

கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!

விதிமுறைகளை மீறி தாக்கல் செய்த அண்ணாமலையின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
X

மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை நீதிமன்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய முத்திரைத்தாளில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலரான கிராந்திகுமார் பாடியிடம் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர். அண்ணாமலையின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர். கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்த பின், அதிமுக வழக்கறிஞர்களும் நாம் தமிழர் வழக்கறிஞர்களும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது பேசிய அதிமுக கோபாலகிருஷ்ணன், “மக்களவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை குறித்து புகார் அளிக்க வந்தோம். வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் அனைத்துமே அப்டேட் செய்ய வேண்டும். நாங்கள் 4.30 மணிக்கு பிரிண்ட் எடுத்து வரும் வரை அண்ணாமலை தாக்கல் செய்த பழைய அபிடவிட் இருந்தது.

3 மனுக்களுக்கும் ஓரே அபிடவிட் மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்தது. ஆட்சியர் அலுவலகத்திற்கு மாலையே வந்தோம். அண்ணாமலை வேட்புமனு இன்று மாலை 5.17 மணிக்கு பதிவேற்றம் செய்து இருக்கின்றனர். புதியதாக அபிடவிட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி என்ன வேண்டுமாலும் செய்வார்கள் என்பதற்கு இது உதாரணம். நாங்கள் புகார் கொடுக்க வந்தவுடன் புது அபிடவிட் வாங்கி வைத்து இருக்கின்றார்.

தேர்தல் அதிகாரி மற்றும் பா.ஜ.க சேர்ந்து இதை செய்து இருக்கின்றனர். சட்டப்படி தவறிழைத்தவர்கள் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாஜகவிற்கு இவ்வளவு ஆதரவாக செயல்படுபவர்கள், நாளை தேர்தல் வாக்கு பதிவு இயந்திரத்தை மாற்றினாலும் மாற்றுவார்கள். மாநில தலைவருக்காக தேர்தல் கமிசன் வளைந்து கொடுத்து செயல்படுகின்றது.

நாளை நாங்கள் ஜெயித்தாலும் தோற்றதாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தவறுகளை மறைக்க மேலும் மேலும் தவறுகளை செய்து இருக்கின்றனர். 5.15 மணிக்கு புகார் கொடுக்க வந்தவுடன் புதிய அபிடவிட் இப்போது கொடுத்து இருக்கின்றனர். தமிழக அரசு பா.ஜ.க மாநில தலைவர் வெற்றி பெற வேண்டும் என உதவி செய்கின்றாரோ என்ற சந்தேகம் இருக்கின்றது.

இந்த செயல்கள் திமுக அரசு ஆதரவுடன் நடைபெறுகின்றதோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது” எனத் தெரிவித்தார். இதையடுத்து பாஜகவிற்கு சாதகமாக செயல்பட்டதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடியை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டுமெனவும், விதிமுறைகளை மீறி தாக்கல் செய்த அண்ணாமலையின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Updated On: 28 March 2024 3:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு