ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட முத்து மாரியம்மன் ; பக்தர்கள் வழிபாடு

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட முத்து மாரியம்மன் ; பக்தர்கள் வழிபாடு
X

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்

இந்தாண்டு தேர்தல் காரணமாக ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் மட்டும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது

தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாளை முன்னிட்டு, கோவையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆண்டுதோறும் கோவை காந்திபுரம் அருகே உள்ள காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இருந்து வருகிறது.

இந்த கோவிலில் சித்திரை திருநாளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பணத்தாள்கள் மற்றும் தங்கம், வைர நகைகளால் அம்மனை அலங்கரித்து தனலட்சுமி அலங்கார பூஜை செய்யப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள 100, 200, 500 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொண்டு அம்மனை ரூபாய் தாள்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் செய்யப்பட்ட அலங்காரத்தை பொதுமக்கள் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் ரூபாய் நோட்டுக்களில் அலங்காரம் செய்யப்பட்டு வரும் நிலையில், ஆண்டுதோறும் அலங்காரம் செய்யப்படும் ரூபாய் நோட்டுக்களின் மதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஆனால், இந்தாண்டு தேர்தல் காரணமாக ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை மட்டுமே கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தனலட்சுமி பூஜை வழிபாடுகள் முடிவடைந்த பிறகு அந்தந்தப் பகுதி பொது மக்களுக்கு அந்த நோட்டுக்கள் திருப்பி அளிக்கப்படும்.

சென்ற ஆண்டு ஆறு கோடி ரூபாய் பணமும், வைரம் தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து அம்மனை தரிசித்து, வழிபாடு நடத்தி சென்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil