மின் கட்டண உயர்வை மாநில பரிசீலனை செய்ய முத்தரசன் கோரிக்கை

மின் கட்டண உயர்வை மாநில பரிசீலனை செய்ய முத்தரசன் கோரிக்கை
X

முத்தரசன் 

தொழிலை காப்பாற்றுவதற்கு மூலப்பொருட்கள் எளிதில் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவை மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பாலஸ்தீன போரில் 45,000 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர் எனவும், அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவது மட்டுமல்லாமல் நேரடி போரிலும் ஈடுபட்டு இருப்பது உலக அளவில் பதட்டமான சூழலை உருவாக்கி இருப்பதாக தெரிவித்தார்.

இந்தியாவை பொருத்தவரை ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்தே பாலஸ்தீன்க்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பது இந்தியாவின் அணிசேரா கொள்கைக்கு எதிரானது இன அழிப்புக்கு ஆதரவு அளிக்கும் போக்கு என தெரிவித்தார். ஒன்றிய அரசு இந்த நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும் எனவும், இதனை முன்னிட்டு 7ம் தேதி நாடு முழுவதும் இடது சாரி கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரிவோர் சங்கம் அமைக்க முடிவெடுத்துள்ளார்கள். அதற்கு உரிமையும் உண்டு எனக் கூறிய அவர், சாம்சங் நிறுவனம் அதனை மறுக்கிறது.

இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் இதில் முதல்வர் தலையிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு இந்த பிரச்சனைக்கு 3 அமைச்சர்களை நியமித்த முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக நன்றி கூறினார்.

கோவையில் பழங்குடி மலைவாழ் மக்கள் இருக்கக் கூடிய பெரியநாயக்கன்பாளையம், ஆனைக்கட்டி, வீரபாண்டி உள்ளிட்ட இடங்களில் பழங்குடி மக்கள் வசிக்கும் இடத்தை தனியார் விடுதி நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் சுடுகாடு உட்பட பல இடத்தை ஆக்கிரமிப்பு செய்கிற போக்கு அதிகரித்து வருகிறது எனவும், தனியார் நிறுவனத்தினர் அரசு இடம், வனத்துறை இடம் மலைவாழ் மக்கள் இடம் ஆகியவற்றில் நவீன விடுதிகளை உருவாக்கி வருகிறார்கள் என்றார்.

ஒரு தனியார் விடுதிக்கு ஆதரவான முறையில் ஆனந்தன் என்பவரை காவலர்கள் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்கிறார்கள். பொய் வழக்கு போடுகிறார்கள் எனவும் கூறிய முத்தரசன், காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை ஆகிய அனைவரும் தனியார் விடுதிக்கு ஆதரவாக இருப்பது நல்லதல்ல. இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். ஈஷா வனத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் எனவும் பெண்களை மூளை சலவை செய்து தாய் தந்தை சொல்வதை கூட கேட்க மறுக்கும் அளவிற்கு அங்கு நடக்கிறது என்றார்.

பாலியல் வழக்கில் ஈஷா மையம் உச்சநீதிமன்றம் சென்று விசாரணைக்கு தடை வாங்கி உள்ளது என்பதை குறிப்பிட்ட அவர்,ஈஷா மீது தவறு இல்லையென்றால் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.மகாசிவராத்திரி விழாவிற்கு அங்கு குடியரசு தலைவர் வருகிறார். இது என்ன நிலைமை? எனவும் கேள்வி எழுப்பினார்.

ஈஷாவில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் மாநில அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். கல்லாறு பழப்பண்ணையை யானை வழித்தடம் எனறு கூறி மூடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதனால் பல்வேறு விவசாயிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயன்படும் என்றார்.

ஒன்றிய அரசு பின்பற்றும் தவறாக பொருளாதார கொள்கையால் எண்ணெய் விலை உட்பட பலவற்றில் விலை உயர்ந்துள்ளது எனவும், மக்களுக்கு சம்பளம் உயரவில்லை ஆனால் விலைவாசி உயர்கிறது என்றார். மேலும் அனைத்து நியாய விலை கடைகளிலும் பண்டிகைகளை ஒட்டி பண்டங்களை விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.

சிறு குறு தொழில்களை காப்பாற்றப்பட வேண்டும், மின் கட்டண உயர்வை மாநில பரிசீலனை செய்ய வேண்டும், எனவும் தொழிலை காப்பாற்றுவதற்கு மூலப்பொருட்கள் எளிதில் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!