சூலூரில் சாக்கடைநீருடன் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

சூலூரில் சாக்கடைநீருடன் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
X

கோவை சூலூரில் மழை நீருடன் கழிவு நீர் தேங்கி நின்றது.

கோவை சூலூரில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று கோவையில் பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் காலை முதல் மழை பெய்யாமல், வெயில் அடித்தது. இந்த நிலையில் மாலை நேரத்தில் சூலூர், வெள்ளலூர், தடாகம், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

கண்ணம்பாளையம், ராவத்தூர், கலங்கல், காசிகவுண்டன் புதூர் காங்கேயம்பாளையம், காடம்பாடி உள்ளிட்ட சூலூர் சுற்றுவட்டார கிராமங்களில் காலை முதல் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை வேளையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.குறிப்பாக சூலூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மாலை வேளையில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியது. சூலூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் திருச்சி சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!