உக்கடம் குளக்கரை தூய்மைப் பணியில் நவீன இயந்திரங்கள்!

உக்கடம் குளக்கரை தூய்மைப் பணியில் நவீன இயந்திரங்கள்!
X

Coimbatore News- தூய்மைப் பணியில் நவீன இயந்திரம்

Coimbatore News- நவீன இயந்திரங்களை கொண்டு நடைபாதையில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Coimbatore News, Coimbatore News Today- கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளக்கரைகள் பொழுகுபோக்கு அம்சங்களுடன் புனரமைக்கப்பட்டு அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன. நடைபயிற்சி செய்பவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் குளக்கரைகளை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். குறிப்பாக உக்கடம் குளக்கரையில் மக்கள் பொழுதுபோக்கும் வகையில் படகு சவாரி, செல்பி பாயிண்ட், ஜீப் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் கோவை நகரப்பகுதியில் உள்ள மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

பொதுமக்கள் அதிகமாக வந்து கூடும் இங்கு குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது நவீன இயந்திரங்களை கொண்டு நடைபாதையில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். குப்பை, பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்டவை அகற்றும் இயந்திரம், தண்ணீரை பீய்ச்சி அடித்து தரையை சுத்தம் செய்யும் இயந்திரம் போன்றவற்றை பயன்படுத்தி அங்குள்ள குப்பை கழிவுகளை அகற்றி சுத்தம் செய்து வருகின்றனர். இதனால் குளக்கரை தூய்மையாக காட்சியளிக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!