கோவையில் செய்தியாளர்களை சந்தித்த LGM திரைப்பட ஜோடி ஹரிஷ் கல்யாண் -இவானா

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த LGM திரைப்பட ஜோடி ஹரிஷ் கல்யாண் -இவானா
கோவை அவிநாசி சாலையில் உள்ள பிராட்வே திரையரங்கில் இன்று LGM திரைப்பட ஜோடி ஹரிஷ் கல்யாண் - இவானா செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ஹரிஷ் கல்யாண் பேசியதாவது: கோவையில் வருவது மிகப்பெரிய சந்தோஷம் எங்களுடைய படம் இங்கே வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மற்றும் அனைத்து இடங்களிலும் அனைவரும் குடும்பத்துடன் இந்த படத்தை மகிழ்ச்சியாக கண்டு களித்து வருகின்றனர் அனைவரும் ரசிக்கும் நல்ல நல்ல கருத்துகள் உள்ளன.கோவையைப் பொருத்த வரை மக்கள் மிகவும் அன்பானவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்றார் ஹரிஷ்கல்யாண்.
நடிகை இவானா கூறும்போது, நாங்களும் ரசிகர்களுடன் படம் பார்த்தோம். படம் பார்த்தவர்கள் அனைவரும் படம் நன்றாக உள்ளதாக தெரிவித்தனர். படம் பார்க்காதவர்கள் படத்தை தியேட்டரில் போய் பாருங்கள். நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல கருத்துகள் ரசிகர்களிடம் இருந்து வருகிறது. தோனி படம் என்பதால் ஆதரவும் அதிகமாகவே உள்ளது. நாங்கள் இந்த படத்தில் நடித்ததை பெரும் பாக்கியமாகவே பார்க்கிறோம். ஹரிஷ்கல்யாண்- இவானா ஜோடி கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருப்பதாக ரசிகர்களிடம் பரவலான உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu