3 புதிய சட்ட தி்ருத்தத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டம்

3 புதிய சட்ட தி்ருத்தத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
X

கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதிய திருத்தச் சட்டங்களை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள இந்திய தண்டனைச் சட்டம், இந்தியக் குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயா்களை மாற்றி நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தியதை கண்டித்து வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய சட்டங்கள் பெயர்களை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர்கள் ரயில் நிலையத்திற்குள் உள்ளே செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த சட்டத்தினால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும், ஏற்கனவே கைதிகளும் ஒரு நாள் லாக்கப்பில் இருந்தால் பாதுகாப்பு இல்லாத சூழலில் இருக்கும் போது தற்போது நீண்ட நாட்கள் வைத்து இருக்க வேண்டும் எனவும் கூறிய வழக்கறிஞர்கள் இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். ஒருவரை கை விலங்கு மாட்டி அழைத்துச் செல்வது மிகவும் வேதனையான விஷயம் எனவும், அதனை மத்திய அரசு அமல்படுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த புதிய திருத்தச் சட்டங்களை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story