மேட்டுப்பாளையம் அருகே ரத்தின விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வனப்பத்திரகாளியம்மன் கோவில் சாலையில் உள்ள ரத்தின விநாயகர் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை 8 மணி முதல் 10 மணி மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்பின் இன்று காலை 4.30 மணிக்கு முதல் 6 மணி வரை கோவிலில் யாகசாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பின்னர் 6.30 மணிக்கு கோவிலை சுற்றி புனித நீர் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து 6.45 மணியில் இருந்து 7 மணிக்குள் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ரத்தின விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தை குருந்தமலை கோவில் அர்ச்சகர் விவேக் செய்து வைத்தார். கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu