சிறுவாணி அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்து விட்ட கேரளா அதிகாரிகள்

சிறுவாணி அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்து விட்ட கேரளா அதிகாரிகள்
X

Coimbatore News- தண்ணீரை திறந்து விட்ட கேரள அதிகாரிகள்

Coimbatore News- அணைக்கு தண்ணீர் வரத்து வெகுவாக அதிகரித்ததை தொடர்ந்து, சிறுவாணி அணையில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீரை வெளியேற்றினர்.

Coimbatore News, Coimbatore News Today,- கோவை மாநகரில் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. இந்த அணையானது கேரளா மாநிலத்தில் அமைந்து உள்ளது. இதன் காரணமாக கேரளா அதிகாரிகள் பல்வேறு கெடுபிடிகள் விதித்து வருகின்றனர். 49 அடி உயரம் கொண்ட இந்த அணையின் தற்போது 45 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க கேரளா அதிகாரிகள் அனுமதித்தனர்.

கேரளா மற்றும் தமிழகத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக சிறுவாணி அணை வேகமாக நிரம்பி வருகிறது. கடந்த வாரம் அணையின் நீர்மட்டம் 42 அடியாக உயர்ந்ததும் அணையில் இருந்து தண்ணீரை கேரளா அதிகாரிகள் எவ்வித முன் அறிவிப்புமின்றி திறந்து விட்டனர். இதனால் தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் சிறுவாணி அணிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து கேரளா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அணையில் 44.64 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்க உடன்பாடு ஏற்பட்டது. இதனை அடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து வெகுவாக அதிகரித்தது. இதனை தொடர்ந்து கேரளா அதிகாரிகள் சிறுவாணி அணையில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீரை வெளியேற்றினர்.

இதுகுறித்து மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும் பொழுது, “சிறுவாணி அணை பகுதியில் நேற்று நிலவரப்படி 162 மில்லி மீட்டர் மழையும், அடிவாரத்தில் 85 மில்லி மீட்டர் மலையும் பெய்தது இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. தொடர்ந்து சில மணி நேரத்திற்கு மட்டும் கேரளா அதிகாரிகள் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டு உள்ளனர்” எனத் தெரிவித்தனர்.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..