ரூ.6.5 இலட்சம் பணத்தாள்களால் அலங்கரிக்கப்பட்ட இடுக்கண் குடி மாரியம்மன்
பணத்தாள்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்
ஆடி மாதத்தில் வருகின்ற அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிகிழமையான இன்று கோவை தாமஸ் வீதியில் அமைந்துள்ள இடுக்கண் குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அப்போது ஆறரை லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தாள்களை கொண்டு கோவில் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அதே போல் அம்மன் வீற்றிருக்கும் வாகனமான அன்னபட்சி முழுவதும் நவதானியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் அலங்கரிக்கப்பட்டுள்ள அனைத்து பணங்களும் பக்தர்கள் அளித்த பணமாகும். நாளை இந்த பணங்கள் அனைத்தும் அந்தந்த பக்தர்களுக்கு பூஜை செய்து பிரசாதங்களுடன் அளிக்கப்படும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்திச் சென்றனர்.
இதேபோல கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டும் இல்லாமல், வெளியூர், வெளி மாநிலத்திலிருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால், அம்மனுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்து அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu