கோவையில் இடை பாலினத்தவர்களின் பெருமை நடை விழிப்புணர்வு பேரணி
இடை பாலினத்தவர்கள் பேரணி
கோவையில் இடை பாலினத்தவர்கள் உரிமைகள் குறித்து கோவையில் பெருமை நடை பேரணி நடத்தப்பட்டது. ஆண்டுதோறும், அக்டோபர் மாதம் 26 ம் தேதி தொடங்கி, நவம்பர் மாதம் 5 ம் தேதி வரை இடை பாலின விழிப்புணர்வு வாரமாகவும், அக்டோபர் 28 ஆம் தேதி இடைப்பாலினர் விழிப்புணர்வு நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில், கோவையில் இந்தியாவின் முதல் இடை பாலின மக்களின் பெருமை நடை பந்தய சாலை பகுதியில் நடைபெற்றது.
இதில் இடை பாலின மக்களும், இடை பாலின சமுக செயல் பாட்டாளர்களும் கலந்து கொண்டு, இடை பாலின மக்களின் உரிமைகள் தொடர்பான வாசகங்கள் அடங்கிய ஏந்தி பேரணி சென்றனர்.
இதுகுறித்து தி வாய்ஸ் இந்தியா இடை பாலின மக்கள் உதவி குழு ஒருங்கிணைப்பாளர் விநோதன் கூறுகையில்,இடை பாலின மக்களின் வலிகள் மிக கொடுமையானது பிறவியில் மரபணு ( chromosome) இணைவினால் உருவாகும் வேறுபாடு காரணமாகவே இடையின மக்கள் பிறக்கிறார்கள், வளர் இளம் பருவத்தில் தங்களது வேறுபாட்டை உணர்ந்து அவர்களது அடையாளத்தை தீர்மானிக்கிறார்கள். இந்தியாவில் முதல் முறையாக இடை பாலின மக்கள் விழிப்புணர்வு நடை நமது கோவையில் நடைபெற்று உள்ளது பெருமை வாய்ந்தது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu