லஞ்சம் பெற மாட்டேன் என உறுதிமொழிப் பத்திரம் கொடுத்து அமமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம்

லஞ்சம் பெற மாட்டேன் என  உறுதிமொழிப் பத்திரம் கொடுத்து அமமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம்
X

உறுதிமொழி பத்திரம் கொடுத்து வாக்கு கேட்ட பிரவன்.

நான் என் கடமையைச் செய்ய ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெற மாட்டேன்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதி 71 வார்டு கிறிஸ்டிபன் பிரவீன் குமார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடுகிறார். இவர் 20 ரூபாய் பாண்ட் பேப்பரில், கோவை மாநகராட்சியில் 71 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறேன். இதன் மூலம் நான் உறுதியளிப்பது என்னவென்றால், நான் என் கடமையைச் செய்ய ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெற மாட்டேன் என உறுதி மொழி பத்திரம் வைத்து உறுதி அளிக்கிறேன் என வீதி வீதியாக பிரச்சாரம் செய்து வருகிறார். கோவை மாநகராட்சி 100 வார்ட் 778 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஒரு சில வேட்பாளர்கள் நூதன முறையில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்