கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு விசிக பிரமுகர் தரையில் அமர்ந்து போராட்டம்

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு விசிக பிரமுகர் தரையில் அமர்ந்து போராட்டம்
X

போராட்டம் நடத்திய சுசி கலையரசன்

சுசி கலையரசன் காரில் மனு அளிக்க வந்தபோது, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே போலீசார் அவரது காரை தடுத்து நிறுத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். இதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் சோதனை செய்த பின் மனு அளிக்க உள்ளே அனுமதி அளித்து வந்தனர். அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சுசி கலையரசன், அவரது காரில் மனு அளிக்க வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே போலீசார் அவரது காரை தடுத்து நிறுத்தினர்.

மேலும், காரை உள்ளே அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். இதையடுத்து, சுசி கலையரசன் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார். மேலும் காவல் துறையினர் உடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார். பின்னர், அவரது வாகனத்தை காவல் துறையினர் உள்ளே செல்ல அனுமதித்தனர். இந்த சம்பவம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!