கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து 3 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து 3 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
X

Coimbatore News- தற்கொலைக்கு முயன்றவரை மீட்ட காவல் துறையினர்

Coimbatore News- ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் புகார் மனுக்களை அளிக்க வருகை தருவது வழக்கம்.

இந்த நிலையில் புலியகுளம் பகுதியைச் சேந்த முருகேசன் என்பவர் தன் மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். கையில் டீசல் கேன் கொண்டு வந்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக டீசலை தன் மீதும், மனைவி மீதும் மேலே ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி மேலே தண்ணீரை ஊற்றி முருகேசன் மற்றும் அவரது மனைவியை காப்பாற்றினர். பின்னர் இருவரையும் பந்தயசாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து முருகேசன் கூறுகையில், கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் கணக்காளராக பணி புரிந்து வருவதாகவும், தான் இருக்கும் போது இன்னொரு நபரை செயல் அலுவலர் கனகராஜ் பணிக்கு அமர்த்தி விட்டாதாகவும் கூறினார். இதனால் தனது வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும், செயல் அலுவலர் கனகராஜ் தனது பணியை பிடுங்கிவிட்டார் எனவும் கூறிய அவர், கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தற்கொலை முயற்சி ஈடுபட்டதாக தெரிவித்தார்.

இதேபோல கோவை பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் நிவாஸன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கொரோனா காலத்தில் வாங்கிய சிறு கடனை அடைப்பதற்காக மேலும் கடன் வாங்கி கட்ட முடியாமல் தவித்து வருவதாகவும் கூறினார். அது வாழ்வாதாரத்தை முற்றிலும் கேள்விக்குறியாகிவிட்டதாகவும், இந்த கடனை அடைக்க போதிய வருமானம் இல்லை என்பதால், இதனை உடனடியாக சரி செய்ய தன் தந்தையின் சொத்தை முழுமையாக தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தன் தந்தை இறந்து ஏழு வருடங்கள் ஆகி விட்டதாக கூறி கொண்டே கையை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவரை உடனடியாக தடுத்து நிறுத்தி பந்தய சாலை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!