திமுக வில் போதை அணி உருவாகலாம் : எச். ராஜா கிண்டல்

திமுக வில் போதை அணி உருவாகலாம் : எச். ராஜா கிண்டல்
X

செய்தியாளர்கள் சந்திப்பில் எச். ராஜா.

டாஸ்மாக் விற்பனையை ஊக்குவிக்கும் இயக்கமாக தி.மு.க செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என எச் ராஜா கூறினார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலுகத்தில் தமிழக பா.ஜ.க ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பாஜகவின் உறுப்பினர்களாக இதுவரை 31 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். 1கோடி வரை உறுப்பினர்களை சேர்க்க குறிக்கோள் வைத்து உள்ளோம். இந்த உறுப்பினர்கள் சேர்க்கை விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பலர் விருப்பத்தோடு பா.ஜ.க - வில் இணைந்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்தி கொடுப்பதில்லை. மத்திய அரசு எவ்வளவு பணம் கொடுக்கவும் தயாராக உள்ளது.

காங்கிரஸ் உடன், தி.மு.க சேர்ந்து கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்கின்றனர். விஸ்வ கர்மா திட்டத்தை தமிழக அரசு கவனம் செலுத்தி அனைவரும் இணைய செய்ய வேண்டும். இதன் மூலம் பலரும் பயனடைவர். தற்போது உள்ள கூட்டணி கட்சிகளுடன் பயணித்து கொண்டு உள்ளோம்.

வேறு கட்சிகளை சேர்க்க வேண்டும் என்றால் பா.ஜ.க தலைமை தான் முடிவு செய்யும். பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி குறித்து அங்கேயும் கேட்க வேண்டாம். இங்கும் கேட்க வேண்டாம். திருமாவளவன் நேற்று முதலமைச்சரை சந்தித்தார். டாஸ்மாக் வேண்டாம் என திட்ட வட்டமாக சொல்லி இருக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என நினைக்கிறவர்களை ஏமாற்றுகின்ற செயலில் திருமாவளவன் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் தற்போது 1000 கிளப் திறந்து உள்ளனர். மக்களை முழுமையாக மோசடி செய்கின்ற வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அக்டோபர் 2 மாநாடு நடதுவதற்குள் டாஸ்மாக் மூட வேண்டும் என முதலமைச்சரிடம் சொல்லி இருக்க வேண்டும். அதை அவர் சொல்ல மாட்டார்.

த.வெ.க தலைவர் விஜய் பிரதமர், பெரியார் பிறந்த நாள் தினம் ஆகியவைக்கு வாழ்த்து சொன்னார். ஆனால் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை. பீகாரை போன்று தமிழகத்திற்கு பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் சாத்தியம் தான். தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் குறித்து அண்ணாமலை சொன்னார். மத்திய அமைச்சரே ஷாக் ஆகிவிட்டார். டாஸ்மாக் விற்பனை ஊக்குவிக்கும் இயக்கமாக தி.மு.க செயல்படுத்தி கொண்டு உள்ளனர். திமுகவில் போதை அணி உருவாகலாம். அந்த அளவிற்கு போதை அதிகரித்து கொண்டு உள்ளது. ராகுல் காந்தி அமெரிக்காவில் செய்து கொண்டு உள்ளது இந்திய விரோத சக்திகளை ஒருங்கிணைப்பது. இந்தியாவிற்கு எதிராக பேசி வருகிறார். ராகுல் காந்தி ஆன்டி இந்தியன். இந்தியாவிற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார்.

5 கட்சி அமாவாசை என்பது செல்வப்பெருந்தகைக்கு பொருந்தும். இந்த ஆட்சியில் தோசை திருப்பும் பக்குவம், இந்த அரசாங்கம் இப்போது போட்டு உள்ள ரோடு அப்படி உள்ளது. ஜி.எஸ்.டி யால், பொருட்கள் விலை குறைந்து உள்ளது. மத்திய அரசாங்கம் திட்டம் என்பதால் பொய்யான தகவலை சொல்லி வருகின்றனர். தமிழக அரசு தீவிரவாத விஷயத்தில் கண் மூடிக் கொண்டு உள்ளது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வெட்கமே இல்லையா, அவரே காலாவதியான ஆன பின்பு எம் எல் ஏ வாக ஆகி உள்ளார்.என்னைப் பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை.

இவ்வாறு எச் ராஜா கூறினார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு