கொல்கத்தா மருத்துவர் கொலையை கண்டித்து ஹோமியோபதி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

கொல்கத்தா மருத்துவர் கொலையை கண்டித்து ஹோமியோபதி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
X

கோவையில் ஹோமியோபதி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாட்டில் மருத்துவர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் சஞ்சய் ராய் என்ற நபரை கைது செய்தனர். இந்த குற்றத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே பெண் மருத்துவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை ஏற்படுத்த வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கோவை மாவட்ட ஹோமியோபதி மருத்துவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் கருப்பு உடை அணிந்து கண்டன பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், நாட்டில் மருத்துவர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!