வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும் - இந்து முன்னணி கோரிக்கை

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும் - இந்து முன்னணி கோரிக்கை
X

Coimbatore News- காடேஸ்வரா சுப்பிரமணியம்

Coimbatore News- இந்துக்களின் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு வங்கதேச இந்துக்களை பாதுகாக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

Coimbatore News, Coimbatore News Today- கோவை கோனியம்மன் கோவிலில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்துகின்றனர். அங்கே சிறுபான்மையாக இருக்கின்ற ஹிந்துக்கள் தங்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பாரத நாட்டின் எல்லையில் காத்து கிடக்கின்றனர். பெண்களும் குழந்தைகளும் பலவந்தமாக தாக்கப்படுகின்ற காட்சிகள் உலகம் முழுக்க எதிர்ப்பை உண்டாக்கி இருக்கிறது. மதத்தின் பெயரால் வங்கதேசத்தில் நடைபெறும் இந்துக்களின் மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும். மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு வங்கதேச இந்துக்களை பாதுகாக்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பாக இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தோம். ஆனால் அதற்கும் தமிழக காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. தமிழகத்தில் இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அழக்கூட உரிமை இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கின்ற தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

நீதிமன்றத்தை நாடி ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை இந்து முன்னணி பேரியக்கம் நிச்சயம் வாங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சுதந்திர தின ஊர்வலங்களுக்கு கூட தமிழகத்தில் தடை விதிப்பது நியாயம் இல்லை. ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை தடை செய்வது ஏற்புடையதல்ல. திமுக அரசு எமர்ஜென்சி காலத்தைப் போல நடந்து கொள்கிறது” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!