மரம் வளர்ப்பு குறித்த கோ க்ரீன் மாரத்தான் போட்டி ; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மரம் வளர்ப்பு குறித்த கோ க்ரீன் மாரத்தான் போட்டி ; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Coimbatore News- மாரத்தான் போட்டியில் ஆர்வமாக பங்கேற்றோர் 

Coimbatore News- கோவையில் மராத்தான் போட்டியை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஓடினார்.

Coimbatore News, Coimbatore News Today- உலக சுற்றுச் சூழலை பாதுகாக்க வலியுறுத்தும் வகையிலும், இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோஜோன் மால் சார்பாக, கோ க்ரீன் என்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாராத்தன் போட்டியை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 1 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.

முன்னதாக போட்டியை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஓடினார். இதில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு பிரிவு வாரியாக ரூபாய் இரண்டு இலட்சம் ரொக்க பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தானில் பங்கேற்றோர் பச்சை நிற ஆடையுடன் ஓடியது பொதுமக்களை ஈர்த்தது. சுற்றுச்சூழலையும், இயற்கையையும் பாதுகாக்கும் வகையில் மரங்களை அதிகளவில் நட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மாராத்தான் போட்டி நடத்தப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story