விசா க‌லாவதியான‌ ஜார்ஜியா நாட்டவர் கைது: சிறையில் அடைப்பு

விசா க‌லாவதியான‌ ஜார்ஜியா நாட்டவர்  கைது: சிறையில் அடைப்பு
கோவையில் சுற்றித் திரிந்த விசா க‌லாவதியான‌ ஜார்ஜியா நாட்டவர் கைது செய்யப்பட்டு து சிறையில் அடைக்கப்பட்டார்

கோவை பொள்ளாச்சி சாலை kuறிச்சி பிரிவு என்.பி.இட்டேரி பகுதியில் வெளிநாட்டு நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போத்தனூர் போலீசார் அந்த நபரை பிடித்தனர். அப்போது அந்த நபர் போதையில் இருந்துள்ளார். தொடர்ந்து அந்த நபரை அழைத்துச் சென்று விசார‌னை செய்துள்ளன‌ர்

பாஸ்போர்ட், விசா என எந்த ஆவணங்களும் இல்லாமல் இருந்த அந்த நபர் தனது பெயர் மூர்மன் மும்லேஸ (26) என்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார் .கடந்த ஒரு மாதமாக கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஒரு வீட்டில் தங்கி இருந்ததாக கூறியுள்ளார். மேலும் அந்த இடம் பற்றிய விபரம் எதுவும் அவருக்குத் தெரியவில்லை.

தொடர்ந்து போலீசார் எதைக்கேட்டாலும் ஹரஹர சங்கர மஹாதேவா என்று மட்டும் கூறிக் கொண்டிருக்கிறார். மேற்கொண்டு அவரிடம் எந்த விசாரணையும் போலீசாரால் நடத்தமுடியவில்லை.

இதையடுத்து அவரை பற்றி கூடுதல் விபரங்களை கேட்டு மத்திய அரசின் வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்திற்கு பிடிபட்ட நபர் குறித்த விவரங்களை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஜார்ஜியா நாட்டு தூதரகத்துக்கு இதுபற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் துறை அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கடந்த 11 ம் தேதியுடன் அவரது விசா காலம் நிறைவடைந்து இருப்பதும், சட்டவிரோதமாக அவர் இங்கு தங்கி இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்..

Tags

Next Story