கோவை திமுக வேட்பாளராக கணபதி ராஜ்குமார் அறிவிப்பு

கோவை திமுக வேட்பாளராக கணபதி ராஜ்குமார் அறிவிப்பு
X

Coimbatore News- வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

Coimbatore News- கோவை தொகுதியில் திமுக வேட்பாளாராக திமுக கோவை மாநகர மாவட்ட அவைத்தலைவராக உள்ள கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Coimbatore News, Coimbatore News Today- 18 வது மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோவை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளாராக திமுக கோவை மாநகர மாவட்ட அவைத்தலைவராக உள்ள கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுகவில் பொள்ளாச்சியை சேர்ந்த தொழிலதிபரும், ஐடி விங்க் மாநில இணைச்செயலாளருமான மகேந்திரன் அல்லது திமுக மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் மருத்துவர் கோகுல் கிருபா சங்கர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் திமுக வேட்பாளராக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

59 வயதான கணபதி ராஜ்குமார், கணபதி பகுதியை சேர்ந்தவர். எம்.ஏ, எல்.எல்.பி, பிஎச்டி படித்துள்ள இவர், விவசாயம் செய்து வருகிறார். அதிமுகவில் பல ஆண்டுகளாக பொறுப்பில் இருந்த கணபதி ராஜ்குமார் 2014 ம் ஆண்டு நடந்த கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 வரை கோவை மாநகராட்சி மேயராக இருந்தார். எஸ்.பி. வேலுமணி ஆதரவாளராக இருந்த இவர், அதிமுக கோவை மாநகர மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

பின்னர் எஸ்.பி. வேலுமணி உடன் மோதல் ஏற்பட்ட நிலையில், கட்சி பணிகளில் இருந்து அவர் ஒரங்கப்பட்டார். இதையடுத்து கடந்த 2020 திமுகவில் கணபதி ராஜ்குமார் சேர்ந்த நிலையில், அவருக்கு மாநகர மாவட்ட அவைத்தலைவர் பதவி தரப்பட்டது. திமுகவில் வேட்பாளராக பலர் போட்டியிட்ட நிலையில், மற்றவர்களை தவிர்த்து இந்த தேர்தலில் கணபதி ராஜ்குமாருக்கு வாய்ப்பு கிடைக்க செந்தில்பாலாஜியின் தீவிர ஆதரவே காரணம் என கூறப்படுகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்