கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ; கோவையில் வலம் வரும் விழிப்புணர்வு வாகனங்கள்

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ; கோவையில் வலம் வரும் விழிப்புணர்வு வாகனங்கள்
X

விழிப்புணர்வு வாகனங்கள். 

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வருகின்ற 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வருகின்ற 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரண்டு விழிப்புணர்வு வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் ஆகியோர் விழிப்புணர்வு வாகனத்தை பார்வையிட்டு, கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியருக்கு தனியார் பள்ளி இசைக்குழு மாணவர்கள் இசை மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், விளையாட்டு அணி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் வீரமங்கை வேடமிட்ட இருவர், அனைவரையும் உற்சாகப்படுத்தினர்.

விழிப்புணர்வு வாகனங்கள் இரண்டும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் எனவும் அதனை தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!