வீரகேரளம் பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாம்!

வீரகேரளம் பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாம்!
X

Coimbatore News- கண் பரிசோதனை முகாம் நடந்தது.

Coimbatore News- வீரகேரளம், பெல்வதர் வித்யா மந்திர் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

இலவச கண் பரிசோதனை முகாம்

Coimbatore News, Coimbatore News Today- வீரகேரளம், பெல்வதர் வித்யா மந்திர் பள்ளியில் ரோட்டரி கோவை டவுன் சங்கம், மற்றும் சங்கரா கண் மருத்துவமனை,கோவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று காலை நடைபெற்றது.


இந்நிகழ்வில் கலந்து கொண்டு மேல் சிகிச்சைக்காக சங்கரா கண் மருத்துவமனை செல்பவர்களுக்கு பிரிவிலெஜ் கார்டு வழங்குதல், இலவசமாக அறுவை சிகிச்சை வழங்குதல் மற்றும் தள்ளுபடியுடன் கூடிய கண்ணாடிகள் பெறலாம் என மருத்துவர் சுர்ஜனா மற்றும் சங்கரா கண் மருத்துவமனை முகாம் பொறுப்பாளர் நிமல்குமார் கூறினர். உடன் தினேஷ்குமார், பாரூல்பால், ஜெய குரு, சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கோவை ரோட்டரி சங்கத் தலைவர் விவேகானந்தன் பேசுகையில், பொது கண் நோய்கள்,விழித்திரை நோய்கள் ஆகியவற்றின் தீவிரம் குறித்தும், அது போன்ற நோய்கள் வராமல் தடுத்தல் பற்றியும் தெரிந்து கொண்டு, முன் கூட்டியே அறிந்து சிகிச்சை மேற்க்கொள்ள இது மாதிரியான கண் பரிசோதனை முகாம்கள் உதவி செய்யும் என்றும், பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொண்டு பயன்பெறுமாறு கூறினார்,

இறுதியாக சங்க செயலாளர் பிரபு நன்றி கூறினார். நூற்றுக்கு மேற்பட்ட மக்கள், கலந்து கொண்டு பயனடைந்தனர்.கோவை டவுன் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் பள்ளி தாளாளர்கள் செந்தில் பிரபு மற்றும் சுப்ரியா ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!