தொடர் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தொடர் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
X

ஆற்றில் செல்பி எடுக்கும் இளைஞர்கள்

மேற்கு தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்வதால் நொய்யல் ஆறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. சிறுவாணி அணைப்பகுதியில் 162 மில்லி மீட்டர் மழையும், அடிவாரம் பகுதிகளில் 85 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. அணையின் நீர்மட்டமும் 44.08 அடியாக உயர்ந்து உள்ளது. இந்நிலையில் கோவையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் நொய்யல் ஆறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் கடந்து செல்கிறது. இதனால் அதனை சுற்றியுள்ள தடுப்பணை குளங்கள் நிரம்பி வழிகிறது. ஆலாந்துறை, சித்திரை சாவடி, ஆத்துப்பாலம் காளவாய் பகுதிகளில் உள்ள தடுபணைகள் நிறைந்து அருவிபோல் வழிந்தோடி வருகிறது.

ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வரும் நிலையில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் செல்பி எடுத்து வருகின்றனர். அதுபோல் உக்கடம் பெரியகுளம், குறிச்சிகுளம், செல்வசிந்தாமணி குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் நீர்மட்டம் உயரும் சூழலும் ஏற்பட்டு உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் நீர் நிலைகள் உள்ள அனைத்து இடங்களிலும் பொதுமக்களின் கண்களில் படும்படியாக எச்சரிக்கை மற்றும் அறிவுப்பு பலகைகளை வைத்து, பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட்டால் உயிர்சேதம் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!