கோவையில் பணமழை பொழிந்தாலும், மக்களின் அன்பு மழை பாஜக மீது இருக்கும் : அண்ணாமலை

கோவையில் பணமழை பொழிந்தாலும், மக்களின் அன்பு மழை பாஜக மீது இருக்கும் : அண்ணாமலை
X

அண்ணாமலை

கோவை மக்களவைத் தொகுதி முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை பார்க்க முடிகிறது.

கோவை சுங்கம் பகுதியில் பாஜக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை மக்களவைத் தொகுதி முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை பார்க்க முடிகிறது. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது கோயம்புத்தூர் ஒரு புரட்சி செய்யும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். 39 தொகுதிகளிலும் கூட தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதை களத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது. அரசியலில் திமுக இருப்பதே ஒரு அவமானம். திமுக 1967 ஆட்சிக்கு வர ஆரம்பித்ததோ, விஞ்ஞான ஊழல், குடும்ப ஆட்சி, பணத்துக்கு வாக்கு கொடுப்பது ஆகியவை திமுக வந்த பிறகுதான் உருவானது. இன்று தனக்கென்று எதுவும் இல்லாமல் ஒரு பொம்மை முதலமைச்சராக இருக்கிறார் ஸ்டாலின். இவர் பிரதமர் மோடியை பற்றி பேச தகுதி இல்லை.

டிஆர்பி ராஜா தஞ்சாவூர்காரர். அவங்க அப்பா பணம் சம்பாதித்தது வைத்து இருக்கின்றார். அதை மட்டுமே வைத்து அரசியலுக்கு வந்திருக்கிறார். அதை தவிர அவருக்கு வேறு எந்த திறமையும் இல்லை. இத்துப்போன டப்பாவோ, கொலுசு கொடுத்து கோவை மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என நினைக்கின்றனரா? டிஆர்பி ராஜா போன்றவர்களுக்கு இந்த மண்ணை எப்பொழுதும் இடம் கிடையாது. அவர்கள் ஈசல் பூச்சி மாதிரி. ஈசல் பூச்சிகள் போல கோவைக்கு திமுககாரர்கள் வந்திருக்கிறார்கள். தந்தையின் எம்எல்ஏ கோட்டோவை பயன்படுத்தி வந்தவர் அதிமுக வேட்பாளர். நான் 2002 முதல் முதல் கோவையில் இருந்து வருகிறேன். நானும் மனைவியும் இருவரும் மனம் புரிந்து, கோவையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அவரை போல கோட்டா சிஸ்டத்தில் வரவில்லை.

காலையில் எழுந்து இரண்டு வேட்பாளர்கள் அண்ணாமலை புராணம் பாடி கொண்டிருக்கிறார்கள். பாஜக புராணம், மோடி புராணம் பாடி கொண்டிருக்கின்றனர். தகர டப்பாவை எடுத்து வரும் பொழுது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போதும் இருக்கின்றேன். எனக்கு அடையாளம் கொடுத்தது கோவை. அந்த கோவைக்கு நல்லது செய்வதற்கு வருகின்றேன். அதிமுக வேட்பாளரை போல அப்பாவை வைத்து போட்டா சிஸ்டத்தில் நான் வரவில்லை. கோவையினுடைய மாற்றத்திற்கு, தீவிரவாத, போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் வருகின்றோம். நாங்கள் வந்தால் வளர்ச்சியை கொண்டு வருவோம், மெட்ரோ ரயில் கொண்டு வருவோம்.

ஸ்மார்ட் சிட்டியில் அதிமுக கொள்ளையடித்த லிஸ்ட் வெளியே விடலாமா? 40 சதவீதம் கமிஷன் வாங்கியதை பேசலாமா? ஊழலை பற்றி பேசுகின்ற மனிதனைப் பற்றி குறை கூறாதீர்கள். 33 மாதமாக தமிழகத்தில் லஞ்ச உழலை பற்றி அதிகம் பேசிய ஒரு தலைவரை காட்டுங்கள் பார்க்கலாம். எதற்கு தனி கூட்டணி வைத்திருக்கின்றோம். 830 கோடி ஆல்ரெடி வந்து விட்டதாக பத்திரிகை செய்தி பார்த்தேன். நாங்கள் சாமானிய மனிதர்கள் இதை எதிர்கொள்வோம். ஆயிரம் கோடியை கொண்டு வந்து பணமழை பொழிந்தாலும், மக்களின் அன்பு மழை தேசிய ஜனநாயக கூட்டணி மீது இருக்கும். பாஜக எங்கிருக்கிறது என்று கேட்டவர் கருணாநிதி. இன்று பாஜகவை திமுக திட்டாத நாளில்லை. காலையில் இருந்து இரண்டு பங்காளி கட்சிகள் ஒன்றாக இணைந்து பிஜேபி வந்தால் மாற்றம் வந்துவிடும், விடக்கூடாது என பேசி வருகின்றனர்

10 ஆண்டுகள் வலிமையான அமைச்சர்களாக இருந்து தங்களை வலிமையாக்கி கொண்டனர். கோயம்புத்தூர் சூடாகி விட்டதா இல்லையா? இரண்டு மூன்று டிகிரி வெப்பம் உயர்ந்திருக்கிறதா? இல்லையா? ஸ்மார்ட் சிட்டி, நொய்யல் என எல்லா நலத்திட்டத்திற்கு கொடுத்தவற்றை கொள்ளை அடித்து இருக்கின்றனர். ஏன் ஒரு வேலையை செய்கின்றனர் என தெரியாமல் வேலையை செய்கின்றனர். எங்கே ஏறினால் எங்கே இறங்குகின்றோம் என்பது தெரியாதபடியான பரம பதத்தைப் போல கோவை பாலம் இருக்கிறது. கோவையில் இருக்கும் பாலங்கள் கமிஷனுக்காக கட்டப்பட்டது. பாலங்கள். எந்த சிந்தனையும் இல்லாமல் கட்டப்பட்டு இருக்கின்றது. இவர்களால் கோவையின் வளர்ச்சி பின்தங்கி இருக்கிறது.

இந்தி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அண்ணாமலையை சிறைக்கு அனுப்புவோம் என அமைச்சர் ரகுபதி சொல்கிறார். இதுதான் மிரட்டல். இரண்டு பேரும் சேர்ந்து கொண்டு எங்களை மிரட்டுகின்றனர். கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை யார் வீட்டிலும் யார் ஆதரவாளர்கள் வீட்டிலும் நடைபெற்றது? பினாயில் வாங்கியதில் ஊழல் செய்தது யார்? கோவையில் கடந்த ஆட்ணியில் 10 காண்ட்ராக்டர்களை உருவாக்கவில்லையா? அந்த காண்ட்ராக்ட்டர்களின் குடும்பத்தில் இருந்து கவுன்சிலர்களுக்கு நிற்கவில்லையா? அண்ணாமலை கோவையில் என்ன செய்கின்றார் என்பதுதான் அனைவரின் பேச்சாக இருக்கின்றது

என்னுடைய வளர்ச்சிக்கு காரணமே என்னுடைய பேச்சு தான் காரணம். இந்த கட்சி வளர்ச்சிக்கும் ஒரு காரணம். ஒளிவு மறைவு இல்லாமல் பேசுகின்றேன். பொத்தி பொத்தி பேசுவதில்லை. இதனால்தான் என் மீது 1230 கோடி ரூபாய்க்கு மானநஷ்ட வழக்கு போட்டு இருக்கின்றனர். ஸ்டாலின் என் மீதும், இபிஎஸ் மீதும் வழக்குகள் போட்டு இருக்கின்றார். இது எங்களுடைய தைரியமான செயல்பாட்டை காட்டுகிறது. சீட்டு கிடைக்காத எம்.பியும் அண்ணாமலை, அண்ணாமலை என்கின்றார். சீட்டு கிடைத்த திமுக, அதிமுகவினரும் என எல்லாரும் அண்ணாமலை அண்ணாமலை என்கின்றனர். சௌமியா அன்புமணி வாரிசு அரசியலில் வரமாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாக பார்க்கிறேன். பசுமை இயக்கத்திற்கு வேலை செய்து இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் 51 சதவீத வாக்குகளை பா.ஜ.க பெறும். கோவை பாராளுமன்ற தொகுதியில் 60 சதவீத வாக்குகள் பா.ஜ.கவிற்கு கிடைக்கும். களத்தில் அதற்காக நண்பர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் 51 சதவீதம், கோவை பாராளுமன்ற தொகுதியில் 60% வாக்குகளை பெறுவோம்” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!