கோவை ஜி.சி.டி.யில் படித்து 50 ஆண்டுகளுக்கு பின் ஒன்று சேர்ந்த பொறியாளர்கள்
கோவை ஜிசிடி பொறியியல் கல்லூரி முன் நின்று படம் எடுத்துக்கொண்ட பொறியாளர்கள்.
கோவை ஜி.சி.டி. பொறியியல் கல்லூரியில் ஐம்பதாண்டுகளுக்கு பின்னர் அங்கு படித்த பொறியாளர்கள் ஒன்று சேர்ந்து பொன்விழா கொண்டாடி உள்ளனர்.
1973 ல் தமிழ்நாட்டில் மொத்தம் 8 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. அதிலும் மூன்று கல்லூரிகள் கோவையில் மட்டுமே இருந்தன. அதில் முதன்மையானது ஜி சி டி எனப்படும் அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியாகும்.
இந்த கல்லூரி எப்படி உருவானது என்பதற்கே ஒரு தனி வரலாறும் உண்டு.
கோவையில் ஜி.டி. நாயுடுவால் முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆர்தர் ஹோப் பாலிடெக்னிக் கல்லூரி தான் பின்னர் அரசினர் தொழில் நுட்பகல்லூரியாக (ஜி.சி.டி) உருவெடுத்து இன்றும் மயில்சாமி அண்ணாதுரை உள்பட பல்லாயிரக்கணக்கான பொறியாளர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
அந்த கல்லூரியில் (1973-78) ஆண்டுகளில் பயின்று பின்னர் மத்திய ,மாநில அரசு தலைமை பொறுப்புகளிலும் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர்கள் ஐம்பதாண்டுகளுக்கு பின்னர் பொன்விழா கொண்டாடும் விதமாக தற்போது அந்த கல்லூரியில் ஒன்று சேர்ந்து விழா கொண்டாடி உள்ளனர்.
அவர்கள் படித்த கால கட்டத்தில் +2 கிடையாது. 11 ம் வகுப்பு எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி. தான். அப்புறம் ஒரு வருடம் PUC ( Pre University Course). PUC முடிந்தவுடன் பொறியியல் கல்லூரயில் சேரலாம். அப்போது ஒன்லி மெரிட் சீட் தான். நிர்வாக ஒதுக்கீடு கட்டண முறை சீட் எல்லாம் கிடையாது.இறுதியாண்டு ரிசல்ட் வரும் முன்னரே அரசு வேலை தயார். 4 , 5 துறைகளில் இருந்து பணி நியமன ஆணை வரும்.
அப்படி வேலை பெற்று தமிழக அரசு மற்றும் மத்திய அரசு உள்பட பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் தான் இப்போது ஒன்று சேர்ந்து உள்ளனர்.
விண்வெளி ஆராய்ச்சி நிலையம் போன்ற விஞ்ஞான கூடங்களிலும் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது பொன்விழா கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கல்லூரியில் விழாவை தொடங்கி பின்னர் மூணாறு சென்று கலந்துரையாடல் மற்றும் கேளிக்கைகளிலும் தங்களது நினைவுகளை குடும்பத்தினருடன் கொண்டாடினர்.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் வியட்நாம், கம்போடியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் இந்தியாவில் வடமாநிலங்களுக்கும் சுற்றுலா சென்று வந்துள்ளனர். இனிவரும் ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் சொல்ல திட்டமிட்டுள்ளனர். 65 வயதிலும் இளைஞர்கள் போல் ஆட்டம் போட்டு சந்தோஷமாக வாழ வழிகாட்டியாக உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu