போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: போலீஸ் கமிஷனர் பங்கேற்பு
சைக்கிள் பேரணி
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டும், போதைப்பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரனி நடத்தப்படட்து. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதைப் பொருட்களால் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பாதித்து வருதல் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையை தடுக்கும் விதமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது. இதில் கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் 78 கிலோ மீட்டர் சைக்கிள் பேரணியாக சென்றார். இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பேரணி தொடங்கியது.
சைக்கிள் பேரணியில் 16 வயது முதல் பெரியவர் வரை பேரணியில் கலந்து கொண்டனர். சைக்கிள் பேரணியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் காவல் அனைவரும் பொதுமக்களுடன் சேர்ந்து காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் சைக்கிள் பேரணியில் பயணம் செய்தார். பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து தொடங்கி டவுன் ஹால், செட்டி வீதி, பேரூர், பச்சாபாளையம், ஆலந்துறை, மாதம்பட்டி, சாடி வயல், ஈசா யோகா சென்று அடைந்தது. அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு அதே வழியாக வந்து இறுதியாக அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் மைதானத்தில் நிறைவடையும். சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மைதானத்தில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu