தேசிய கல்வி கொள்கையை கண்டித்து கோவையில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

தேசிய கல்வி கொள்கையை கண்டித்து கோவையில்  திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
X

திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

தேசிய கல்விக் கொள்கை மற்றும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள மறுத்து வரும் நிலையில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு நிதியை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையை கண்டித்தும், தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக திராவிட கழகம் சார்பில் இன்று பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவையில் உக்கடம் பகுதியில் திராவிடர் கழக இளைஞர் அணி மற்றும் திராவிட மாணவர் கழகம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட திராவிடர் கழகத்தை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் மத்திய அரசு திணிப்பதாகவும், அதனை ஏற்க மறுத்தால் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா