இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசுபவர்களை திமுக அரசு ஊக்குவிக்க கூடாது : வானதி சீனிவாசன்..!
ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை துவக்கி வைத்த வானதி சீனிவாசன்
கோவை வஉசி பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டமன்றத்தில் கோவை தொகுதிக்கு குரல் கொடுக்கும் போது, கோவைக்கு எண்ணற்ற திட்டங்கள் கொடுத்துள்ளதாக துறை சார்ந்த அமைச்சர்கள் கூறுகிறார்கள். அமைச்சர்கள் வாய்ப்பிருந்தால் கோவைக்கு வரும் போது, எனது தொகுதிக்கு வர வேண்டும்.
சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் பேச முற்படும் போது முழுமையாக பேச விடுவதில்லை. மேட்டுபாளையம் - கோத்தகிரி சாலையில் நீட் எதிரான வாசகங்கள் மற்றும் இந்தியா ஒழிக என்று எழுதுகிறார்கள். இது கண்டிக்கதக்கது. மத்திய, மாநில அரசுக்கு பல முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் இது போன்று இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசுபவர்களை தடுக்க வேண்டும். திமுக அரசு ஊக்குவிக்க கூடாது.
30 நாட்களுக்கு மேலாக நடக்கும் மானிய கோரிக்கை இந்த முறை 8 நாட்களுக்குள் முடிவடைந்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. தமிழகம் போன்ற மிக முக்கியமான மாநிலத்திற்க்கு இந்த நாட்கள் போதாது. இன்னும் மக்களின் பிரச்சனையை ஆழமாக விவாதிக்க வேண்டும். எதிர்கட்சிகள் பேசும் போது, அதிக குறுக்கீடுகள் உள்ளது.
நல்ல தலைவர்கள் தமிழகத்திற்க்கு வர வேண்டும் என நடிகர் விஜய சொன்னதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. படித்தவர்களைவிட மக்களுக்காக உணர்வுபூர்வமாக உழைக்க கூடியவர்கள் அரசியலில் தேவை. சினிமாவில் எப்படி வேண்டுமானாலும் நடித்திருக்கலாம். ஆனால் அரசியல் தலைவராக சினிமா நடிகர்கள் மாறியதற்க்கு பிறகு அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.
சட்டத்தில் இன்று பலதிருத்தங்கள் தேவை. உயர்கல்வி துறையை பொறுத்தவரை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கவர்னருக்கு எதிராக மிக தனிப்பட்ட முறையில் எதிரான மனநிலையோடு பேசுவது உயர்கல்வி துறையில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. நானா, நீயா என்கிற வகையில் மாநில அரசு எடுத்துக் கொள்கிறது. கவர்னர் பொதுவெளியில் பேசுவதை இவர்களின் சித்தாந்திற்க்கு எதிராக பேசுவதாக எடுத்து கொண்டு, அவருக்கு எதிராக பேசுவது உயர்கல்விதுறையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நிறைய பிரச்சனைகளை சந்திக்கவேண்டிய சூழல் உள்ளது.
திராவிட மாடலில் கிக் தான் முக்கியம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நிவாரணம் அறிவிப்பதில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். பரப்பரப்பாக பிரேக்கிங் செய்தி வரக்கூடிய பிரச்சனைக்கு மட்டும் கூடுதல் நிவாரணம் அறிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu