கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை
கணபதி ராஜ்குமார்
கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டனர். அதில் திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார், அதிமுகவை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். 64.89 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இரண்டாவது சுற்று முடிவில் திமுக 12413 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. திமுக 53580 வாக்குகளும், பாஜக 41167 வாக்குகளும், அதிமுக 23396 வாக்குகளும் பெற்றுள்ளன. தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதேபோல பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியிலும் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி முன்னிலை வகித்து வருகிறார். மூன்றாவது சுற்று முடிவில் திமுக 25863 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 74537 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 48674 வாக்குகளும், பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் 33952 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu